தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 பேர் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவகத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்காத 19 வேட்பாளர்கள்!
T
The Leader Desk
ஆகஸ்ட் 26, 2024 • 8:09 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 பேர் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவகத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
- இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
- இந்த வேட்பாளர்களில் ஒருவர் சமீபத்தில மரணித்துள்ளார்.
- இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
இந்த வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தைக் கூட நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்குச் சீட்டு அச்சிட தேர்தல்கள் ஆணைக்குழு கோடிக்கண்கான ரூபாவை செலவிடுகிறது.
இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களில் ஒருவர் சமீபத்தில மரணித்துள்ளார். இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் நல்ல நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பெரிதாக இதுவரை இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

