கொவிட் வைரஸ் பரவுவதால், பாடசாலைகளை திறப்பது மிகவும் சவாலானது, எனவே கல்வி அமைச்சின் வழிகாட்டுதல், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுடன் முழு மேற்பார்வையின் கீழ், கல்வி அமைச்சு, பாடசாலைக்கு முந்திய சுகாதாரம் மற்றும் பாடசாலைக்கு பிந்திய சுகாதார நடைமுறைகளை உறுதி செய்வதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது.

இதைப் பராமரிக்க அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சு, பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுக்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன், மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அதிபர்களின் செயற்பாடுகளை இம்மாதம் 6, 7, 8, 9 மற்றும் 10 ம் திகதிகளில் கண்காணிக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள் தொடங்குவது தொடர்பாக கல்வி அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gove.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி