சாதாரண விமான சேவைகளுக்காக ஜனவரி 23 முதல் விமான நிலையத்தை மீண்டும் திறக்க அரசு தயாராகி வருகிறது.உக்ரைன் உட்பட முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் அழைத்துவருவதற்கான திட்டத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சுற்றுலா மற்றும் சுகாதார அமைச்சகங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் கடந்த வார இறுதியில் பல விசேட சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்த விமான மற்றும் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப ஜனவரி பிற்பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையம் திறக்கப்படும் என்று கூறினார்.

புதிய பொதுமைப்படுத்துதலுக்கு ஏற்ப அலுவலகங்களையும் நிறுவனங்களையும் பராமரிக்கவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் அரசாங்கம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

எங்களுக்கு முன், சில நாடுகள் விமான நிலையங்களை சுற்றுலா பயணிகளின் வருகைக்காக திறந்தன. அந்த நாடுகளின் அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையில் சுற்றுலாத் துறையைத் தொடங்குவோம் என்று நம்புகிறோம்.கொவிட் அபாயத்தை கருத்திற் கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைச் செய்துள்ளோம்.

மத்தல விமான நிலையத்தை செயற்பாட்டில் உள்ள விமான நிலையமாக மாற்றவும் முடிந்தது. ரத்மலான விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்காலத்தில் தொடங்கப்படும், இந்த ஆண்டை இலங்கையை பிராந்தியத்தில் விமான மையமாக மாற்றுவதற்கான முன்னோடி ஆண்டு என்று கூறலாம், ”என்றார்.

(அருண-நயன தரங்க கமகே)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி