leader eng

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முதன்மையாகக் கொண்ட பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட

பிரதிநிதிகளுக்கான செயலமர்வொன்று இன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

நிமல் சிறிபால த சில்வா, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, லசந்த அழகியவன்ன, மஹிந்த அமரவீர ஆகியோரின் தலைமையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

இதில், அந்த செயலமர்வு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் நடைபெறும் கலந்துரையாடல்கள், அரசாங்கத்தின் பிரதியமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இந்த நேரத்தில் கொண்டு வருவது நல்லதா கெட்டதா என்பது, கல்விச் சீர்திருத்தங்கள், மாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசாங்கத்தின் பயணத்தின் போக்கு குறித்தும் குழுவினர் கலந்துரையாடினர்.

''அரசாங்கத்தின் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக மட்டுமே பொதுவான மேடை உருவாக்கப்படுகிறது''

சஜித் பிரேமதாச, ரணில் அல்லது ஜி.எல் தலைவர் அல்ல எனவும், இன்று ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்றவை நடைபெறாமல் இருப்பது அரசாங்கம் நல்லதாக இருப்பதனால் அல்ல, எதிர்க்கட்சி நல்லதாக இருப்பதனாலேயே எனவும், எதிர்க்கட்சியில் எவரும் அவற்றில் கலந்துகொள்வதில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

தமது கட்சி ஒருபோதும் அரசாங்கத்தைக் காலைப் பிடித்து இழுக்கப் போவதில்லை எனவும், அதேபோன்று அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டிய தேவையும் இல்லை எனவும், தமது கட்சி அரசாங்கத்தின் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக மட்டுமே ஒரு பொதுவான மேடையை உருவாக்குகிறது எனவும், 'மாலிமா' அரசாங்கம் இப்போது முன்வைத்துள்ள கல்விச் சீர்திருத்தங்களை தமது கட்சி பத்து வருடங்களுக்கு முன்னரே முன்வைத்தது எனவும், அந்த கல்விச் சீர்திருத்தம் இன்றியமையாதது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி