Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

16 எம்.பிக்கள் மாத்திரமா தமது சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளனர்?

T

The Leader Desk

ஆகஸ்ட் 16, 2024 • 5:23 PM

16 எம்.பிக்கள் மாத்திரமா தமது சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளனர்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருகின்றன.
  • இந்தப்பதிவில், முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் 17 பேரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகள் மட்டுமே அங்கு பதிவிடப்பட்டுள்ளன.
  • மேலும் அதில் வெளியிடப்பட்டுள்ள சொத்து அறிக்கைகளில், "2023/2024 ஆண்டு" சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.
எழுத்து அளவு:

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள்  வெளிவருகின்றன. இதேவேளை, 'பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மாத்திரமே தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களில் இல்லை' எனவும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. 

இதில், Transparency International Sri Lanka வின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.tisrilanka.org/mpassets/ என்ற இணையதளத்தையும் மேற்கோள்காட்டி சில பதிவுகள் பகிரப்படுகின்றன. இந்தப்பதிவில், முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற  உறுப்பினர்களில் 17 பேரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகள் மட்டுமே அங்கு பதிவிடப்பட்டுள்ளன. மேலும் அதில் வெளியிடப்பட்டுள்ள சொத்து அறிக்கைகளில், "2023/2024 ஆண்டு" சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் தரவுகள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளன. 
 
IMG 20240816 224911 800 x 533 pixel
 
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய 
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆராய்ந்த போது, ஆணைக்குழுவிற்கு கடந்த 30.06.2024 வரை வழங்கப்பட்ட தரவுகளின் படி  2024.06.30 ஆம் திகதிக்குள் சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டிய 169 பாராளுமன்ற  உறுப்பினர்களில் 116 பேர் தமது சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் 53 பேர் இதுவரை சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதையும் அறிய முடிந்தது. 
 
 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்பு சட்ட விதியின் படி "2023/2024" ஆண்டுகளின்  தங்கள் சொத்துக்கள் மற்றும்  பொறுப்புப் பிரகடனங்களை அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் உட்பட தனிநபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்கள் ciaboc.lk  என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும். 
 
இதில், இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுரகுமார திஸாநாயக்க, ஹரிணி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் ஆகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.  
 
ஆகவே,  'பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மாத்திரமே தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களில் இல்லை' எனவும் பகிரப்படும் செய்தியில்  உண்மையல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...