Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பொலிஸாரால் காதில் அறையப்பட்ட 16 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 8, 2024 • 10:44 AM

பொலிஸாரால் காதில் அறையப்பட்ட 16 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவர் ஒருவர் பயாகல பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
  • இந்த மாணவன் நேற்று (07) மாலை தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் நண்பருடன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
  • பயாகல பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

மாணவர் ஒருவர் பயாகல பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பயாகல பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
 
இந்த மாணவன் நேற்று (07) மாலை தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் நண்பருடன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். இருப்பினும் இவரது நண்பர் தலைக்கவசம் அணியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
 
அதனைப் பார்த்த பயாகல பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸார்  இருவர் அவர்களை துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களைத் திட்டியுள்ளனர். 
 
இந்நிலையில் மாணவர்கள பயணித்த மோட்டார்  சைக்கிளின் எஞ்ஜின் இயங்கியதால் பயந்துபோன  மாணவன் மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
 
மீண்டும் அவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற மாணவனின் காதில் அடித்ததோடு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பாடசாலை மாணவனின் காதில் பல தடவைகள் அறைந்துள்ளனர். 
 
இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவன் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
 
சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...