சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில், இன்று (21) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன்

ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஏழு பேர் காயமடைந்த நிலையில் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் போக்குவரத்து காரணமாக, இனிகொடவெல ரயில் கடவை மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவ்வழியாக வந்து கொள்கலன் ரக லொறியொன்று, நிறுத்தப்பட்டிருந்த வான் மீது மோதியுள்ளது.

இதனால் அந்த வான், பவுசர் ரக வாகனம் மீது மோதியுள்ளது. விபத்தில் அந்த வான் பலத்த சேதமடைந்துள்ளது. சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி