போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதிக்கு மேலதிகதி உதவிகள் கிடைக்காவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள்
14,000 குழந்தைகள் வரை உயிரிழக்க நேரிடும் என்று, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
மார்ச் 2ஆம் திகதி முதல் காசா பகுதிக்கு உதவிகள் செல்வதை முற்றிலுமாக நிறுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பின்னர், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட 22 நாடுகள், காசா பகுதிக்கு உடனடியாக உதவிகளை அனுப்ப அனுமதிக்குமாறு இஸ்ரேலை கேட்டிருந்தன.
இந்நிலையில், 11 வாரங்களுக்குப் பிறகு காசா பகுதிக்குள் உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான லொறிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று, காசா பகுதிக்குள் குழந்தைகளுக்கான உணவு உட்பட மனிதாபிமான உதவிகளை ஏற்றிச்செல்ல, ஐந்து லொறிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்ததாக, ஐ.நாவின் மனிதாபிமான உதவித் தலைவர் டொம் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்காவிட்டால், 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.
இதனால், காசா பகுதிக்கு குழந்தைகளுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை ஏற்றிச்செல்ல, ஐக்கிய நாடுகள் சபையினால் 100 லொறிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.