ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய அரசு புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது, தீவிரவாதத்திற்கு எதிரான
நமது போர் புதிய அத்தியாயத்தை அடைந்து உள்ளது. இதுதான் இனி "நியூ நோர்மல்" என்று பிரதமர் மோடி நேற்று பேசுகையில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அர்த்தம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், பாகிஸ்தானில் இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியபோது,பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் தைரியமும் நடுங்கியது.
பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத தளங்கள் உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 9/11 மற்றும் இந்தியாவில் நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட உலகில் நடந்த அனைத்து பெரிய பயங்கரவாத தாக்குதல்களும் இந்த பயங்கரவாத தளங்களுடன் தொடர்புடையவை.
நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன.
அந்த தாக்குதல் என்னை தனிப்பட்ட வகையில் உலுக்கியது. என்னை கவலையில் தப்பியது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும்.
பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது. 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது.
இனி இராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய அரசு புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது, தீவிரவாதத்திற்கு எதிரான நமது போர் புதிய அத்தியாயத்தை அடைந்து உள்ளது. இதுதான் இனி "நியூ நார்மல்" என்று பிரதமர் மோடி நேற்று பேசுகையில் குறிப்பிட்டு இருந்தார்.
அது என்ன நியூ நோர்மல்
நியூ நார்மல் என்று மோடி குறிப்பிடுவது.. இனிமேல் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் முறையாக இந்தியாவிற்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்படும். அதாவது இதுவரை அது போன்ற தாக்குதல்கள் act of terror. இனிமேல் act of war. மேலும் பதிலடி அதற்கு ஏற்றபடி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது நம்முடைய நாட்டை ஒரு நாட்டின் ராணுவம் தாக்கினால் மட்டுமே இதுவரை அது போர்.
இனிமேல் ஒரு நாட்டில் செயல்படும்.. உதாரணமாக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் நம்மை தாக்கினால் கூட அது பாகிஸ்தான் உடனான போராக கருதப்படும். எந்தவொரு பயங்கரவாதச் செயலும் முறையாக இந்தியாவிற்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்படும். இதற்கு போர் என்ற அடிப்படையிலேயே பதிலடியும் கொடுக்கப்படும்.
நாட்டின் உள்ளே சென்று தாக்கும்
இரண்டாவதாக ஒரு நாட்டின் தீவிரவாத கும்பல் நமது நாட்டின் மீது தாக்கினால் அந்த தீவிரவாத கும்பல் மட்டுமன்றி அந்த கும்பல் இருக்க இடம் தரக்கூடிய நாட்டையும் எதிரி நாடாக, தீவிரத்தை ஸ்பான்சர் நாடாக இந்தியா கருதும்.
அணு ஆயுத பவர்
மூன்றாவது ஒரு நாட்டிடம் அணு ஆயுத பவர் இருக்கிறது என்பதற்காக அந்த நாட்டின் தீவிரவாத கும்பல் நம் மீது தாக்கினால் அந்த தீவிரவாத கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. இனி அணு ஆயுத பவர் உள்ள நாடாக இருந்தாலும் அந்த தீவிரவாத கும்பல் கும்பல் மீது நாம் தாக்கலாம்.
இதுதான் இந்தியாவின் கொள்கை மாற்றம். இந்த கொள்கையை மும்பை தாக்குதலின் போது கூட இதை இந்தியா மாற்றவில்லை. புல்வாமா தாக்குதலின் போது கூட இந்தியா இதை மாற்றவில்லை. ஆனால் இந்த முறை மாற்றி உள்ளனர். இனிமேல் தீவிரவாத தாக்குதல் நடந்தால் அது போர் அறிவிப்பாக பார்க்கப்படும். இப்போது மேற்கொண்டு உள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மொத்தமாக முடிவிற்கு கொண்டு வரப்படும்.
மோடி பேச்சு
பிரதமர் மோடி நேற்று தனது பேச்சில், குருத்வாராக்கள், கோயில்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியுள்ளது பாகிஸ்தான். அணு ஆயுத சோதனைக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார். இப்போது நாங்கள் எங்கள் தாக்குதல்களை தாற்காலிகமாவே நிறுத்தி உள்ளோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை தாக்கியுள்ளது பாகிஸ்தான் நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா அழித்ததை உலகமே பார்த்தது. பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. நண்பர்களே, இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில், பயங்கரவாதிகள் காட்டிய காட்டுமிராண்டித்தனம் நாட்டையும் உலகையும் உலுக்கியுள்ளது. இயற்கையை கொண்டாடிக் கொண்டிருந்த அந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் மதம் குறித்து கேட்ட பிறகு, அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தன்னுடைய எதிர்ப்பையும், பலத்தையும் முழுமையாக காட்டியுள்ளது
பாகிஸ்தானில் நேரடியாக தாக்குதல் நடத்தினோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் பயிற்சி மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் . டிரோன்கள் ஏவுகணைகள் மூலம் நாங்கள் தாக்குதல் நடத்தினோம்.
இப்படி ஒரு முடிவை இந்தியா எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். 100-க்கும் அதிகமான தீவிரவாதிகளை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாம் அழித்தோம். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு நீதி வழங்க ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையாக நின்றது. பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் அங்கு பலத்த சேதத்தை இந்தியா கொடுத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது.
கடந்த சில நாட்களில் நாட்டின் திறமையையும் பொறுமையையும் நாம் அனைவரும் கண்டோம். ஆயுதப்படைகள், ராணுவம், உளவுத்துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நான் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். தாக்குதல் நடத்த அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன்.
இன்று, இந்த வீரம், துணிச்சல், ஆயுதப் படைகளின் தைரியத்தை நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், நாட்டின் ஒவ்வொரு சகோதரிக்கும், நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு மற்றும் அது நீதியை வழங்குவதற்கான உத்தரவாதம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
-வன்இந்தியா