கொத்மலை - கெரண்டியெல்ல பகுதியில, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான

பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, நீண்ட தூர பஸ்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு நேரத்திற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவின் நாயகம் வழக்கறிஞர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பஸ் விபத்துகள் தொடர்பாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுபோன்ற கடினமான வீதிகளில் இரவில் மேற்கொள்ளப்படும் நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து சேவைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

"கதிர்காமம் – குருநாகல் போக்குவரத்து என்பது, அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொள்ளும் போக்குவரத்து சேவையாகும். இதுபோன்ற பயணங்களில் ஈடுபடும் பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு நேரத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வளவு நீண்ட பயணத்திற்கு முன் அவர்களுக்கு சரியான ஓய்வு கிடைக்குமா? அதற்குத் தேவையான வசதிகள் பஸ் நிலையங்களால் வழங்கப்படுகின்றனவா? அவர்கள் பயணத்தின் போது ஏதேனும் இடைவேளை எடுக்கிறார்களா என்பதையும் நாங்கள் கவனித்துள்ளோம்.

‘போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், விபத்து குறித்து விசாரிக்க துறையின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த உதவி ஆணையர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று, அவர் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி