ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இழக்கப்பட்டால்
ஏற்படும் பொருளாதார இழப்பு, சுமார் 1.23 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கலாம் என்று, கொள்கை ஆய்வுகள் நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
GSP சலுகைகள் இழப்பால், இலங்கையானது MFN பிரிவில் இணைக்கப்படும். அதனால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக பரிவர்த்தனைகளில், வரி அதிகரிப்பை இலங்கை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் விளைவாக, இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அதன் ஏற்றுமதியில் 36.7 சதவீதத்தை இழக்கும்.
GSP+ விலக்கிக்கொள்ளப்பட்டதன் தாக்கம் இலங்கையின் ஏற்றுமதி மற்றும் தொழிலாளர் தொகுப்பில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களான டாக்டர் அசங்க விஜேசிங்க, சாயா திசாநாயக்க மற்றும் ரஷ்மி அனுபமா ஆகியோரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் அதன் முடிவுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.