நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி

(ஆட்டோ) கட்டணத்தைக் குறைக்க  முடியாது என்று, மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (01) ஊடக சந்திப்பை நடத்திய அதன் தலைவர் லலித் தர்மசேகர, முச்சக்கரவண்டி கட்டணங்களைக் குறைப்பதை விட, முறையான ஒழுங்குமுறை மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கூறினார்.

கட்டணங்களை நிர்ணயிப்பதற்கான முறையான முறை இல்லாததால், நாடு முழுவதும் இயக்கப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஜூலை மாதத்தில் பஸ் கட்டணம் நிச்சயமாக கணிசமானளவில் அதிகரிக்கும் என்று, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ்கள் தற்போது 3 ரூபாய் நட்டத்தில் இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

“எதிர்வரும் சிங்களப் புத்தாண்டில் டீசல் விலை குறைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், நமக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன என்பதை நான் பொறுப்புடன் சொல்ல முடியும். வருடாத பஸ் கட்டணம், குறிப்பாக ஜூலை, ஜூன் மற்றும் ஏப்ரல் மாத இறுதியில் மாறுகிறது. எனவே, பஸ் கட்டணம் குறைக்கப்பட்டாலும், ஜூலை மாதத்தில் பஸ் கட்டணம் நிச்சயமாக கணிசமான அளவில் அதிகரிக்கப்படும்.

“இந்த விடயம் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து அமைச்சருடன் விவாதித்தோம். இதை நாங்கள் அவருக்கு நேரடியாகத் தெரிவித்தோம். இருப்பினும், ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டண உயர்வை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி