Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

‘ஆர்.சம்பந்தன் போர்க் குற்றவாளியா?’

T

The Leader Desk

டிசம்பர் 15, 2022 • 3:06 PM

‘ஆர்.சம்பந்தன் போர்க் குற்றவாளியா?’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
  • காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சம்பந்தன் சர்வகட்சி கூட்டத்தில் அவர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
  • வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ.
எழுத்து அளவு:

குற்றவாளியா? என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2126ஆவது நாள் இன்று.

அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் சம்பந்தன் கூறியது யாழ்ப்பாணத்தில் ரணில் சொன்னதுதான்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சம்பந்தன் சர்வகட்சி கூட்டத்தில் அவர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டது சம்பந்தனுக்கு எப்படி தெரியும்?அவர் அதை நம்பினால், ஆதாரம் மற்றும் நேரில் கண்ட சாட்சியைக் எமக்கு காட்டுங்கள்.

இலங்கை சிங்களத் தலைவர்களிடம் அவர் முள்ளிவாய்க்காலில் இருந்த அனைவரையும் கொல்லச் சொன்னதால் தான் , அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக தைரியமாக வெளியே வந்து சொல்ல முடிகிறது.

இதனால்தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு வன்னியை சிங்களவர்கள் கைப்பற்றும் வரை சம்பந்தனும் ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களும் சென்னையில் ஒளிந்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை விரும்பாததற்குக் காரணம், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் குற்றவாளியாக்கும் என்பதாலேயே என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...