Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ஜனாதிபதியாகும் திட்டத்தில் கோட்டாவை விரட்டியடிக்க சதி செய்த பஸில்

T

The Leader Desk

டிசம்பர் 15, 2022 • 2:44 PM

ஜனாதிபதியாகும் திட்டத்தில் கோட்டாவை விரட்டியடிக்க சதி செய்த பஸில்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள கம்மன்பில எம்.பி, “கோட்டாவின் ஆட்சியில் தோன்றிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையாமல் தடுப்பதற்குப் போதுமான வாய்ப்பு இருந்தது.
  • “இரசாயனப் பசளைக்கான தடை எந்தளவு விளைவை நாட்டில் ஏற்படுத்தும் என்று தெரிந்தும்கூட பஸில் அதற்கு அனுமதி வழங்கினார்.
  • அதேபோல், எரிபொருள் நெருக்கடி வந்தபோது 14 மணிநேர மின்வெட்டுக்கு பஸில் அனுமதி வழங்கினார்.
எழுத்து அளவு:

எடுப்பதற்குப் பதிலாக, அந்த நெருக்கடியை மேலும் பெரிதாக்குவதற்கே பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டிய புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, கோட்டாவை விரட்டியடித்துவிட்டு நாடாளுமன்றம் ஊடாகத் தான் ஜனாதிபதியாகும் திட்டத்திலேயே பஸில் செயற்பட்டார் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள கம்மன்பில எம்.பி, “கோட்டாவின் ஆட்சியில் தோன்றிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையாமல் தடுப்பதற்குப் போதுமான வாய்ப்பு இருந்தது. ஆனால், பஸில் அதைச் செய்யவில்லை. நிலைமையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு அவர் திட்டம் தீட்டினார்” என்றார்.

“பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்து கோட்டா பதவியை விட்டு ஓடினால் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாகும் திட்டம் ஒன்றை பஸில் வகுத்திருந்தார். அதற்காவே இரசாயன பசளைக்கான தடைக்கு அவர் அனுமதி வழங்கினார்.

“இரசாயனப் பசளைக்கான தடை எந்தளவு விளைவை நாட்டில் ஏற்படுத்தும் என்று தெரிந்தும்கூட பஸில் அதற்கு அனுமதி வழங்கினார். அதேபோல், எரிபொருள் நெருக்கடி வந்தபோது 14 மணிநேர மின்வெட்டுக்கு பஸில் அனுமதி வழங்கினார்.

“இவை அனைத்தும் நாட்டில் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும். அதனூடாகக் கோட்டா பதவியை விட்டு ஓடுவார் என்று பஸில் அறிந்து வைத்திருந்தார்.

“அப்படி நடந்தால் நாடாளுமன்றத்தின் ஊடாக  ஜனாதிபதியாவதுதான் பஸிலின் திட்டம். ஆனால், இடையில் வந்து ரணில் விக்கிரமசிங்க புகுந்துகொண்டதால் எல்லாம் பிழைத்துவிட்டது” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதியாகும் திட்டத்தில் கோட்டாவை விரட்டியடிக்க சதி செய்த பஸில் | Tamil Leader | We Lead the Nation