Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, குடியேறுதல் மோசடியைத் தடுக்க டிஜிட்டல் மயமாக்கல்

T

The Leader Desk

டிசம்பர் 14, 2022 • 5:14 PM

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, குடியேறுதல் மோசடியைத் தடுக்க டிஜிட்டல் மயமாக்கல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியேறுதல் தொடர்பாக டிஜிற்றல் மயப்படுத்தப் படாதிருப்பதால் இதுவரை பலதரப்பட்ட ஏமாற்றுக்காரர்களுக்குத் தேவையான முறையில் இத்துறையில் செயல்படுவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றது என வெளிநாட்டு சக்தி மேலும் வலியுறுத்துகின்றது.
  • வேலைவாய்ப்புகளுக்கு விசிட் வீசா மூலம் டுபாய் நாட்டுக்குச் சென்ற பல இளைஞர்களும் யுவதிகளும் தொழில் வாய்ப்புகள் கிடைக்காது தெருத் தெருவாக அலைந்து திரிந்து பல துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
  • கடந்த காலங்களில் விசிட் வீசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு கடந்து செல்லும் எண்ணிக்கையும் அதிவிரைவாக அதிகரித்துள்ளது.
எழுத்து அளவு:

படி ஏமாற்றுக்காரர்கள் மற்றும் முறையற்ற செயற்பாடுகள் என்பவற்றை  நிறுத்துவதற்கு குடியேறுதல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் உடனடியாக டிஜிட்டல் மயப்படுத்த வேண்டுமெனவும் இதுவரை டிஜிட்டல் மயப்படுத்தப்படாது இருப்பதற்கான காரணம் என்ன எனக் கேட்டுக் கொள்வதாகவும் வெளிநாட்டுசக்தி அமைப்பு வேண்டி நிற்கின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியேறுதல் தொடர்பாக டிஜிற்றல் மயப்படுத்தப் படாதிருப்பதால் இதுவரை பலதரப்பட்ட ஏமாற்றுக்காரர்களுக்குத் தேவையான முறையில் இத்துறையில் செயல்படுவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றது என வெளிநாட்டு சக்தி மேலும் வலியுறுத்துகின்றது.

கடந்த காலங்களில் விசிட் வீசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு கடந்து செல்லும் எண்ணிக்கையும் அதிவிரைவாக அதிகரித்துள்ளது.

விசிட் வீசா மூலம் தொழிலாளர்களை வேலைவாய்ப்புகளுக்கு அழைத்துச் செல்வது ஏமாற்றுக்காரர்களின் கைவசம் இருந்தமையால் இலங்கை நாட்டிலிருந்து தொழில்களுக்குச் செல்லும்  பெரும்பாலானோர் பல இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

வேலைவாய்ப்புகளுக்கு விசிட் வீசா மூலம் டுபாய் நாட்டுக்குச் சென்ற பல இளைஞர்களும் யுவதிகளும் தொழில் வாய்ப்புகள் கிடைக்காது தெருத் தெருவாக அலைந்து திரிந்து பல துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஓமான் மற்றும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இராஜதந்திர உறவுகளில் கூட பாதிப்புகளை ஏற்படுத்தி இறுதியில்  கரும்புள்ளியாக அது மாறுமளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டமைக்கும் முக்கிய காரணம் இந்த டிஜிற்றல் மயப்படுத்தலில் இருந்து தூர விலகியிருந்தமையாகும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியேறுதல் தொடர்பான தகவல்களை ஒரு டிஜிட்டல் தளத்தில் ஒன்று சேர்க்க முடியுமானால் இவ்வகையான ஏமாற்றுக்காரர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும் என வெளிநாட்டு சக்தி நிறுவனம் வலியுறுத்திக் கூறுகின்றது.

எனவே இத்துறையை உடனடியாக டிஜிட்டல் மயப்படுத்த வேண்டுமெனவும் அதற்காக அரசதரப்பினர் தமது அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டுமெனவும் வெளிநாட்டு சக்தி நிறுவனம் மேலும் குறிப்பிடுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...