Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கெபித்திகெல்லேவ சம்பவம் - 14 பேர் கைது

T

The Leader Desk

நவம்பர் 1, 2022 • 10:12 AM

கெபித்திகெல்லேவ சம்பவம் - 14 பேர் கைது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தேகத்தின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • அப்போது ஒரு கும்பல் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.
  • கெபித்திகெல்லேவ, ரம்பகபுவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழுத்து அளவு:

சந்தேகத்தின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெபித்திகெல்லேவ, ரம்பகபுவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தமது கடமைகளை சரியாகச் செய்வதில்லை என குற்றம் சுமத்தி அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் கெபித்திகெல்லேவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் நான்கு உத்தியோகத்தர்களுடன் அப்பகுதிக்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அப்பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அப்போது ஒரு கும்பல் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.

அப்போது பொலிஸ் சார்ஜன்ட் மீது சிலர் தாக்குதல் நடத்தி அவரது துப்பாக்கியை எடுத்துச் செல்ல முயன்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த கெபித்திகெல்லேவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வானத்தை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதன்போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் கெபித்திகெல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால், மெதவாச்சியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கெபித்திகெல்லேவ சம்பவம் - 14 பேர் கைது | Tamil Leader | We Lead the Nation