கொரோனா வைரஸால் நேற்று (05) இறந்த மோதரையைச் சேர்ந்த பெண்னொருவர் கொழும்பு நகரில் இறந்தார் அதனால் மீண்டும், கொரோனா பரவும் ஆபத்து உள்ளது.

ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த பெண்ணிற்கு நோய் அறிகுறிகள் இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 26 அன்று ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக அந்த பெண் எலிஹவுஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அந்த பெண் உடல்நிலை மோசமடைந்ததால் மே 2 ம் தேதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது அறிகுறிகள் கொரோனா வைரஸின் அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன என்பதை அறிய மருத்துவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது சிக்கலானது!

கொழும்பு மோதரையில் இறந்த பெண் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் பி பிரிவின் 13 வது மாடியில் வசித்து வந்ததாகவும், அவர் எவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளானார் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும் அப்பகுதியின் பொது சுகாதார பரிசோதகர் ஷெஹன் அதுக்கோரலே தெரிவித்தார்.

அந்தப் பெண்ணின் கணவர் பேக்கரி பொருட்களை முச்சக்கர வண்டியில் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களில் விற்றுள்ளார்.

இறந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பது உறுப்பினர்களும் பி.சி.ஆர் சோதணைகளை மேற்கொண்ட பின்னர் கந்தகாடு தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் தனிமைப்படுத்தல்:

“இந்த பெண் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையின் ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (06) முதல் அங்கு வசித்து வந்த வர்கள் , பி.சி.ஆர் சோதனைகளுக்கான மாதிரிகள் எடுப்பதற்காக மெத்சாண்டா பிளாட்ஸுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு பதினைந்து பி.சி.ஆர் சோதனைகள் பெற திட்டமிடப்பட்டது. இதன் விளைவாக, தொடர்ந்து அவ்வாறு செய்வோம் என்று நம்புகிறோம். இந்த வீட்டு வளாகத்தில் கிட்டத்தட்ட 5,000 பேர் வாழ்கின்றனர். இப்பகுதி இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று மோதரவுக்கு பொறுப்பான பொது சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

(ஆதாரம் - நெத் செய்தி)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி