leader eng

மூத்த அரசியல் வர்ணனையாளரும் பத்திரிகையாளருமான விக்டர் ஐவன், பாராளுமன்றத்தை கூட்டாதது தனது அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவருடன் ஒரு குழுவும் இணைந்துள்ளது பேராசிரியர் அன்டன் மீமனா,கல்வியாளர் எம்.பிரேமவர்த்தன வழக்கறிஞர் திஸ்ஸ, வைத்தியர். டி. எஸ். எஃப். டி. ஹேரத் மற்றும் ஊடகவியலாளர் மஹிந்த ஹந்தக ஆகியோர் ஏனைய மனுதாரர்களாவர்.

ஜனாதிபதி சட்டத் தரணி எம்.ஏ சுமந்திரனால் மே 5 ம் திகதி மனுதாரர்களுடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றாலும், அது அவ்வாறு செய்யப்படவில்லை என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் தேர்தல்களை நடத்துவதற்கான திகதியை நீடிப்பது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுநோய்

மனுதாரர்கள் உயிருக்கு ஆபத்து மற்றும் சுதந்திரமானதும்  மற்றும் நியாயமானதுமான தேர்தலை நடத்த இயலாமை ஆகியவற்றையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசியலமைப்பின் 17 மற்றும் 126 வது பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள சட்ட விதிகளின்படி இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு விசாரணை மற்றும் 12 (1) மற்றும் 14 (1) (அ) பிரிவுகளின் அடிப்படை உரிமைகள் மீறும் வரை தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகளை அமுல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி