Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கிழக்கில் சுவீகரிப்புக்குச் சென்ற தொல்லியல் அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

T

The Leader Desk

டிசம்பர் 13, 2022 • 4:29 PM

கிழக்கில் சுவீகரிப்புக்குச் சென்ற தொல்லியல் அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொல்பொருள் திணைக்களத்திற்கு சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
  • இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்யம் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.நடராசா, போரதீவுப்பற்று மாவட்ட அவைத் தலைவர் வை.
  • காணிப்பிரச்சினை தொடர்பில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் கோயிலை சூழவுள்ள பகுதிக்கு மேலதிகமாக வெடுச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் தொல்பொருள் திணைக்களம் எல்லைக்கற்கள் அமைப்பதற்கான இடங்களை அடையாளப்படுத்தி உள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

தொல்பொருள் திணைக்களத்திற்கு சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட படுவாகங்கரையில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்களை நிறுவுவதற்கு நேற்று 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் பிரதிநிதிகளுடன் வந்த காணி உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வெடுச்சேனை மற்றும் வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் கோயிலை அண்மித்த பகுதிகளிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் காணப்படுவதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடங்களில் எல்லைக் கற்கள் அமைக்கப்படுவதற்கு மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குச் சென்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி கலந்துரையாடியுள்ளார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்யம் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.நடராசா, போரதீவுப்பற்று மாவட்ட அவைத் தலைவர் வை. ரஜனி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து கொண்டதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காணிப்பிரச்சினை தொடர்பில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் கோயிலை சூழவுள்ள பகுதிக்கு மேலதிகமாக வெடுச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் தொல்பொருள் திணைக்களம் எல்லைக்கற்கள் அமைப்பதற்கான இடங்களை அடையாளப்படுத்தி உள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

003

001

 002

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...