பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 225 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அலரிமாளிகைக்கு திங்கள்கிழமை (மே 04) கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் விடுத்த அழைப்பை சமகி ஜன பல வேகய  நிராகரித்துள்ளது.

"நடைமுறையில் உள்ள சூழ்நிலையில் நாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை. இந்த நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய மிகவும் நடைமுறைச் சாத்தியமான  நடவடிக்கை முன்னாள் சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்றத்தை கூட்டுவதாகும் என்பதை நாங்கள் பொறுப்புடன் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்" என்று கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளளார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பழைய நாடாளுமன்றத்தை கூட்ட அரசு ஏன் மறுக்கிறது

ஜனாதிபதியும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அரசாங்கம் உட்பட அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்திக் கொண்டார்

இப்போது நிதி விஷயங்களைக் கையாண்டு சட்டங்களை இயற்ற பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்று சமகி ஜனபலவேகய கூறியுள்ளது.

 

    

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி