ஜனாதிபதித் தேர்தல் யுத்தம்
மிகவும் சூடுபிடித்துள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,பொதுஜன பெரமுவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்க்ஷ கடைசி நேரத்தில் வேட்புமனுவை சமர்ப்பிக்காமல் ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறலாம் என சிங்கள ஊடகம் ஒன்றுக்கு எஸ்.பி் திஸாநாயக்க வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்