மாலம்பே ஜயந்தி மாவத்தையில்
உள்ள வீடொன்றில் விஷவாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
65 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த இருவர் சில இரசாயனங்களைக் கலந்ததால் ஏற்பட்ட நச்சுப் புகை கசிவு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மாலம்பே பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீட்டில் உள்ள இரசாயனப் பொருட்களை இதுவரை அடையாளம் காண முடியவில்லை எனவும், குறித்த நச்சுவாயு தொடர்ந்தும் வீட்டினுள் இருப்பதால் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வீட்டுக்குள் செல்வது சிரமமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.