Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 125 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

T

The Leader Desk

நவம்பர் 9, 2022 • 7:07 AM

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 125 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவர்களில் 125 பேர் விளக்கமறியலில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைய இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
  • அவர்களில் 42 பேர் உயர்நீதிமன்றத்தினாலும், 39 பேர் நீதவான் நீதிமன்றத்தினாலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 44 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • "2021 ஓகஸ்டில் சிறைச்சாலை புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆகும்.
எழுத்து அளவு:
 
இவர்களில் 125 பேர் விளக்கமறியலில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைய இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை வழங்குமாறு, தகவல் அறியும் உரிமையின் கீழ், ஜூலை 2021இல் செய்யப்பட்ட கோரிக்கை பொலிஸாரால் நிராகரிக்கப்பட்ட பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்ட அம்பிகா சத்குணநாதன் மேன்முறையீடு செய்ததையடுத்து, ஒக்டோபர் 26ஆம் திகதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்த நிலையில் தகவல்களை வெளியிட வேண்டிய நிலைமை பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு ஏற்பட்டது.
 
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பெரும்பாலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கை 81 ஆகும். அவர்களில் 42 பேர் உயர்நீதிமன்றத்தினாலும், 39 பேர் நீதவான் நீதிமன்றத்தினாலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 44 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நீதிமன்ற உத்தரவின்றி இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும்,  மற்றையவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
எவ்வாறாயினும், பொலிஸாரின் புள்ளிவிபரங்களுக்கும் சிறைச்சாலை புள்ளிவிபரங்களுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கூறுகிறார்.
 
"2021 ஓகஸ்டில் சிறைச்சாலை புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆகும். 85 பேர் விளக்கமறியலில் உள்ளனர். 205 பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 298 ஆகும்” என சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
 
அவர்களில் பெரும்பாலோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறுகிறார்.
 
கலாநிதி தீபிகா உடகம தலைமையிலான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சட்டத்தரணி சத்குணநாதன் கடமையாற்றிய போது, பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
 
சிங்களவர் அல்லாத இனங்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் கொடூரமான சட்டமாக குறிப்பிடப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அண்மையில் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகிய இரு மாணவர் தலைவர்களின் கைதுடன்  தென்னிலங்கையில் பேசுப்பொருளானது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...