1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்

பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானைக் கைது  செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களனிவெளி பெருந்தோட்டத்துக்கு உட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
களனிவெளி பெருந்தோட்டத்துக்கு உட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட அவரது சகாக்களுக்கு எதிராக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இது தொடர்பான வழக்கு இன்று (22) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜயமினி அம்பகஹவத்த முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி