1200 x 80 DMirror

 
 

காத்தான்குடியில் பூநொச்சிமுனையில்

குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இரவு காணப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஆ பள்ளி வீதியில் வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகானுக்கு அருகில் கைக்குண்டு ஒன்று கிடப்பதை இன்றிரவு அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
 
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று குறித்த கைக்குண்டை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதேவேளை இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதேரால் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி