இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  எச்சரித்துள்ளதுடன் சோதனை ந டவடிக்கைகளை அதிகைரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிக்விகையில் நாளொன்றுக்கு 1,000 க்கும் குறைவான கொவிட் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டிய. அவர் இதனை மூன்று மடங்காக அதிகரிக்கவேண்டு என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 20 திங்கள் முதல் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரு மாதமாக நாட்டில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை தளர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நேற்று ஏப்ரல் 19 மாலை சமூக ஊடகங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட சோதனைகள் மற்றும் கூட்டு சோதனைகளை இன்னும் அதிகப்படுத்தி விரைவாக நோயாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என ரனில் விக்ரமசிங்க அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். 

தொற்றுநோய் ஆபத்து இன்னும் குறையவில்லை

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், தொற்றுநோயின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை.

கொவிட் 19 விபத்து தொடர்பாக லங்கதீபா செய்தித்தாள் வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு தவறானது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நாட்டில் சுமார் 30,000 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று சுகாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஐ.தே.க தலைவர் மேலும் தெரிவித்தார்.

"நோயின் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இரண்டாவது எழுச்சியின் சாத்தியத்தையும், இரண்டாவது முறையாக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையையும்  நாங்கள் நிராகரிக்க முடியாது.

நோயாளிகளை அடையாளம் காண சோதனைகள்:

தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நோயாளிகளை இனம் கான்பதற்கான  எண்ணிக்கையை முடிந்தவரை அதிகரித்துள்ளன, அதேபோல் எமது நாட்டிலும் நோயாளிகள் அனைவரும் இனம்காணப்பட்டால், நோய் பரவுவதை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும் என்று முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உலக சுகாதார அமைப்பு (WHO) மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நோயாளிகளை அடையாளம் காண்பதற்கான சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் , சமூக தூரத்தை படிப்படியாக குறைத்து  பொருளாதாரத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.தே.க தலைவர் அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தல்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களை எதிர்கொண்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கூறி, ஏப்ரல் 20 முதல் ஒருமாதகாலம் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 19 அன்று கொழும்பில் இருந்து மொத்தமாக 15 கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்று  அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி