கொரோன வைரஸ் தொற்றியவர்கள் என உறுதி செய்யப்பட்ட 15 பேர் இன்று (19) அடையாளம் காணப்பட்டனர். அதோடு, கொரோனா நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 271க அதிகரித்துள்ளது. கொரோனா நோய் தொற்றியவர்களோடு நெருக்கமாகப் பழகியமை காரணமாக கொழும்பு பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 15 பேருக்கு நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாழைத்தோட்டம், பண்டாரநாய மாவத்தையில் அறியப்பட்ட வைரஸ் தொற்றிய பெண்ணோடு நேரடி உறவுகள் வைத்திருந்த 56 பேரின் மரபணு மாதிரிகள் நேற்று (18) பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றின் அறிக்கை இன்று மாலை வௌியிடப்பட்டுள்ளது. அதில் 12 பேருக்கு நோய் தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

தவிரவும், நேற்று பகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கும் நோய் தொற்றியுள்ளமை தெரியவந்துள்ளதோடு, அப்பிரதேசத்தில் குடியிருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் நேற்றிரவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கும் நோய் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி