Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

IMF கடனுதவிக்கு அங்கிகாரம் கிடைத்த பின்னரே அமைச்சரவையில் திருத்தம்!

T

The Leader Desk

டிசம்பர் 12, 2022 • 2:26 AM

IMF கடனுதவிக்கு அங்கிகாரம் கிடைத்த பின்னரே அமைச்சரவையில் திருத்தம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என அந்த வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அமைச்சரவைக்கு புதிதாக 12 அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான பட்டியல் சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அனுப்பப்பட்ட போதிலும், அமைச்சர்கள் நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வந்தது.
  • அதன்படி, பன்னிரெண்டு அமைச்சர்களின் புதிய நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குப் பின்னர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அறியமுடிகிறது.
எழுத்து அளவு:

.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என அந்த வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக்கு புதிதாக 12 அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான பட்டியல் சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அனுப்பப்பட்ட போதிலும், அமைச்சர்கள் நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வந்தது.

பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பிறகு புதிய அமைச்சர்கள் நியமனம் நடைபெறும் என்றும் வதந்திகள் பரவினாலும் அதுவும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

அமைச்சரவை தற்போது பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்டதுடன், அரசியலமைப்பின் படி மேலும் பன்னிரண்டு அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி, பன்னிரெண்டு அமைச்சர்களின் புதிய நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குப் பின்னர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அறியமுடிகிறது.

அமைச்சரவைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் வஜிர அபேவர்தன, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோரும் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், எஞ்சியவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...