கொரோனா தொற்றினால் இறந்த உடல்களை பயங்கரவாதிகள் உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தடயவியல் நோயியல் நிபுணர் (consultant forensic pathologist) வைத்தியர் சன்னா பெரேரா கூறுகிறார்.

அவர் நேற்று (15) பிபிசி உலக சேவை (BBC WORLD SERVICE) யில் (Newshour) நியூஸ் ஹவர் நிகழ்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது  .

கொரோனா சடலங்களை தகனம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமையானது இந்த வைரஸ் அங்கீகரிக்கப்படாத வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு விடுமோ  என்ற அச்சம் உள்ளது. 

"சில நேரங்களில் ஒரு தேவையற்ற நபர் அத்தகைய உடலைப் பெற்று அதை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம்" என்று அவர் கூறினார்.

இந்தநிகழ்ச்சியில் இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் துணைத் தலைவரான ஹில்மி அகமதும் கலந்து கொண்டிருந்தார்.

Hilmi Ahamad

'நாங்கள் மிகுந்த கவலையில் இருக்கிறோம்' -  என்று இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் துணைத் தலைவர் ஹில்மி அகமது தெரிவித்தார்.

கேள்வி: முஸ்லிம் சமூகம் தங்களது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்வதை விட தகனம் செய்யும் போது அவர்களது பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கின்றது?

பதில்: அதிர்ச்சி, கோபம், துக்கம் அனைத்தும் ஒன்றாக கலந்திருக்கின்றன. , குறிப்பாக 30 ஆம் தேதி தகனம் செய்யப்பட்ட நபர் அவர் சட்டத்தின்படி அடக்கம் செய்யப்படுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர் ஆனால் அது அப்படி நடக்கவில்லை.

கேள்வி: தகனம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளிப்படும் ஆட்சேபனைகளைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

பதில்: 182 நாடுகளும் உலக சுகாதார அமைப்பும் அடக்கம் அல்லது தகனம் செய்ய அனுமதிக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டபோது, ​​இலங்கை மட்டுமே வேறுவிதமாக செயற்பட்டுள்ளது .

கேள்வி: எனவே அரசாங்கம் இதை ஏன் செய்கிறது என்று நினைக்கிறீர்கள்?

பதில்: நாங்கள் பேசிய அரச மருத்துவர்கள் இன்னும் கொரோனா வைரஸ் பற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறினார்கள். ஆனால் அரசாங்கத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், கொரோனா வைரஸால் தண்ணீரை மாசுபடுத்தவோ அல்லது தண்ணீரில் வாழவோ முடியாது என்றார். எனவே இந்த நடவடிக்கைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.

கேள்வி : அரசாங்கம் இதற்கு என்ன காரணத்தை முன்வைக்கிறது என்று  நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: மருத்துவத் தொழிலில் சிலருக்கு இனவெறி நிகழ்ச்சி நிரல் இருப்பதாகத் தெரிகிறது. முஸ்லிம்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். முஸ்லிம்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தங்கள் சொந்த மதச் சட்டங்களைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர்கள் அனைவரும் ஒரு பொதுவான சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். என்று கூறுகின்றனர் எனவே இது ஒரு முன்னோடியாக இருக்கலாம்.

“சில மருத்துவ வல்லுனர்கள் இனவெறி நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. முஸ்லிம்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ''

கேள்வி: இதுவரை நிகழ்ந்த ஏழு மரணங்களில் மூன்று முஸ்லிம்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கையில்இலங்கையில் முஸ்லிம்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

பதில்:அது ஒரு உண்மையான அறிக்கை. இந்த பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட சிறப்பு வைத்திய பிரிவுகளை புறக்கணித்து  தனியார் துறையிடம் சிகிச்சை கோரியுள்ளனர்.

கேள்வி : நான் புரிந்து கொண்டபடி, இறந்த பிறகு, முஸ்லிம்கள் தங்கள் உடல்களைக் கழுவி போர்த்துகிறார்கள். தீங்கு விளைவிக்கும் எச்சங்களிலிருந்து மாசுபடுவதைத் தடுக்கவும், அதைச் சுமக்கும் நபர்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு உபகரணங்களை அணிய அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்யத் தவறினால், அடக்கம் செய்யும் போது ஒரு சிறிய ஆபத்து ஏற்படலாம்அல்லவா?

பதில்: உயிருடன் இருக்கும் முஸ்லிம்களுக்கு இறந்தவர்களை அடக்கம் செய்வதில்  சில பொறுப்பு இருக்கிறது. முதலில், உடலைக் கழுவ வேண்டும். இரண்டாவது, வெள்ளை துணியால் மூடி. மூன்றாவது பிரார்த்தனை பின்னர் நல்லடக்கம்.

நாங்கள் கழுவத் தேவையில்லை என்பதை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினோம். அவற்றை வெள்ளை துணியால் மறைக்க நாங்கள் விரும்பவில்லை. உடலுக்கு சீல் வைக்கலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. மேலும், அதிகாரிகள் அவற்றை அடக்கம் செய்யலாம்.

இறந்தவர்களுக்காக பிரார்த்திக்க  எங்களுக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே தேவை. இதை 50 மீட்டர் தொலைவில் கூட செய்யலாம். ஆனால் அடக்கம் செய்வது எங்களுக்கு முக்கியம். அடக்கம் மருத்துவமனை அல்லது மருத்துவ ஊழியர்களால் செய்யப்படலாம். முஸ்லிம்கள் இதில் ஈடுபட தேவையில்லை.

கேள்வி: இந்த விஷயத்திற்கு நீங்கள் தயாரா? இவை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?

பதில்: நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினோம். இன்னும் பலவற்றை முன்மொழிந்தோம். மாசுபடுதலுக்கும் பயந்து சவப்பெட்டியை கொங்கிரீட் செய்யவும் நாங்கள் தயாராக இருந்தோம் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி