இலங்கையில் கொரோனா வைரசால் அதிக ஆபத்து இருக்கின்ற நிலையில், அரசாங்கத்தின் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள் சார்பாக அவசர பொதுத் தேர்தல் நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு மரண தண்டனை என்று முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறுகையில், ஒருமாதகாலம் ஒட்டுமொத்த சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அர்ப்பணிப்பு மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அர்ப்பணிப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது .

ஒன்லைனில் வீடியோ மூலமாக முன்னாள் அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நேற்று கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 15 பேர் இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் இன்று (ஏப்ரல் 15) காலை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தொற்றுநோய் இருக்கின்றபோதிலும் ஒரு விறுவிறுப்பான பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

"இந்த மாபெரும் தியாகத்தினை வார்த்தைகளால் மட்டும், பாராட்ட முடியாது

“கிட்டத்தட்ட ஒரு மாதமாக, இந்த நாட்டு மக்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான பெரும் போராட்டத்தில் பல தியாகங்களைச் செய்துள்ளனர்.

மேலும், இந்த வைரசை கட்டுப்படுத்த நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அரச அதிகாரிகள் தங்கள் உயிரையும் பாராமல் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர்.

இந்த உறுதிப்பாட்டை நாம் வார்த்தையில் மட்டும் பாராட்ட முடியாது.

நாங்கள் ஒரு தேர்தளில் வாக்களிக்க , வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச்சீட்டைப் போடுவது மட்டுமல்ல.

அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க, பல வாரங்கள் நாம் பணியாற்ற வேண்டும்.

நிச்சயமாக, நீங்கள் வீடு வீடாகச் செல்ல வேண்டும், துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும், உங்கள் கட்சியின் கொள்கைகளை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, தேர்தல் நாளிலும், எங்கள் எல்லா படாசலைகளிலும் நூறாயிரக்கணக்கான வாக்காளர்கள் வரவேண்டி இருக்கும்.

அப்பாவி மக்களின் சடலங்களுக்கு மேல் நின்று தேர்தலை நடாத்த தயாரா?

நிச்சயமாக, அப்பாவி மக்களின் சடலங்களுக்கு மேல் நின்று வாக்களிக்க நான் தயாராக இல்லை. இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் இந்த நாட்டின் மருத்துவ வல்லுநர்களும், WHO மற்றும் பிற நாடுகளும் கொரோனா வைரஸிலிருந்து 100% விடுபட்டுள்ளோம் என்பதை ஒப்புக் கொள்ளும் வரையில் நாம் தேர்தலை நடத்துவது  பேரழிவுக்கு வழிவகுக்கும்.

மக்கள் சார்பாக நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்

எவ்வாறாயினும், தேர்தல் நடைபெறும் வரை, அரசாங்கம், குறிப்பாக கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட பாராளுமன்றத்திற்கு அதிக நிதி ஒதுக்க விரும்பினால் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட முடியும்.

எனவே, ஜனாதிபதி நாட்டின் தலைவராக பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாராளுமன்றத்தை கூட்டியவுடன்,

பொறுப்பான எதிர்க்கட்சியாக, தேவையான நிதியை அரசு ஒதுக்கும் போது  அதை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

ஆனால் அவசரப்பட்டு கொரோனாவுக்கு இடையில் தேர்தலை நடத்துவதாக இருந்தால்

இந்த நாட்டில் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு எந்தத் தீங்கும் இல்லை என்று,

தேர்தல் ஆணையாளருக்கு,

சுகாதார நிபுணர்கள்,பொறுப்பான அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அரசாங்கமும், மக்களுக்கு 100% உத்தரவாதம் அளிக்க முடிந்தால்,

அந்த நாளில், நாங்கள் பாராளுமன்றத் தேர்தலை நடத்தலாம், புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் பணியாற்ற முடியும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி