கிழக்கு மாகாண ஆளுநர்

செந்தில் தொண்டமான் - கல்முனை மாநகர முன்னாள் மேயர் - ஏ.எம். ரகீப் ஆகியோர் இன்று (30)  சந்தித்துப் பேசினர்.

கல்முனை மாநகர முன்னாள் மேயரின் இல்லத்தில் இடம்பெற்றது.
 
கல்முனை மாநகர சபையில் - ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் மற்றும் கடமையாற்றிய ஊழியர்களின் நிரந்தர நியமனம் வழங்குவது. தொடர்பில் - முன்னாள் மேயர் ரகீபினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட ஆளுநர் செந்தில் - அவர்களுக்கு உடன் நிரந்தர நியமனம் வழங்க இணக்கம் தெரிவித்ததுடன் - உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்தார்.
 
இதேவேளை - உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் - கிழக்கு ஆளுநரின் இணைப்பாளர்களாக நாளை திங்கட்கிழமை நியமனம் செய்யப்படவுள்ளனர்.
 
இந்த  நிகழ்வு - நாளை பிற்பகல் 2 மணிக்கு - திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
 
இதற்கான அழைப்பு - சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் ஊடாக - உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மேயர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி