புத்தளம் பகுதியில் சி.ஐ.டி நடத்திய சோதனையின் போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அவர்களை நேற்று மாலை புத்தளத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 40 மற்றும் 41 வயதுடைய புத்தளத்தில் வசிப்பவர்கள்.இந்த சம்பவம் குறித்து சிஐடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

கிஜாஸ் ஹிஸ்புல்லா, ஜனாதிபதி சட்டத்தரனி

இதற்கிடையில், வழக்கறிஞரான கிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்யும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீன் வழக்கிலும், வைத்தியர் ஷாஃபி விசாரணையிலும் ஜனாதிபதி வழக்கறிஞர் கிஜாஸ் ஹிஸ்புல்லா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தேர்தல் திணைக்களத்தின்  உறுப்பினர் ரத்னஜீவன் கூல் தெரிவிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி கிஜாஸ் ஹிஸ்புல்லா, மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது பாராளுமன்றத்தை கலைக்க அவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என்று கூறியுள்ள அவர் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த விதம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் விளக்கினார், தேர்தளை நடத்துவது மட்டுமல்ல, வாக்காளரின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதன் மூலமும் இந்த ஆணை பாதுகாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் போது ராஜபக்சக்கள் அளித்த வாக்குறுதிகள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக்ஷசக்களின் முழக்கங்களில் ஒன்று, கோதபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானவுடன், மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டது

சிங்கள-பௌத்த பிரச்சாரத்தை இலக்காகக் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய இலக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இருந்தார்.

அரசாங்கம் இப்போது ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது, ரிஷார்ட் பதுயுதீன் காரணியை எடுத்துக்காட்டி சிங்கள-பௌத்த வாக்குகளை பெற்றுக்கொள்ளும் பிரச்சாரத்தை மீண்டும் மேற்கொண்டதற்காக அரசாங்கதி ன் செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி