Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இலங்கையில் கோரமான பேய் வீட்டில் மோதல்; 12 பேர் கைது!

T

The Leader Desk

ஜூன் 25, 2024 • 2:46 PM

இலங்கையில்  கோரமான பேய் வீட்டில் மோதல்; 12 பேர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலங்களில் கோரமான பேய் வீடுகளை காட்சிப்படுத்துவதை தடை செய்வது குறித்து புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
  • இதேவேளை, நவகமுவ பிரதேசத்தில் உள்ள பேய் வீடொன்றுக்கு தனது காதலனுடன் சென்றிருந்தபோது அவர்களுக்கிடையில் ​​அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
  • அப்போது, ​​21 வயதுடைய தனது மனைவியை கணவர் தாக்க முற்பட்ட நிலையில், மோதலில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
  • பின்னர் இவர்களை சரீரப் பிணையில் விடுவிக்க கடுவெல நீதிவான் நேற்று (24) உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

காலங்களில் கோரமான பேய் வீடுகளை காட்சிப்படுத்துவதை தடை செய்வது குறித்து புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, அடுத்த வருடம் முதல், விநோதமான பேய் வீடுகளை காட்சிப்படுத்துவதை தடை செய்வதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது என துறைசார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

இவ்வருடம் வெசாக் மற்றும் பொசன் தினங்களில்  நடத்தப்பட்ட பேய் வீடுகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அண்மையில், அஸ்கிரிய விஹாரையின் புத்தளத்துக்குப் பொறுப்பான பிரதம சங்கநாயக்க மிகெட்டுவத்த சுமித்த தேரர், பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம்  இவ்வாறான கண்காட்சிகளை தடை செய்யுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைக் கருத்திற் கொண்டு அடுத்த வருடம் முதல் வெசாக் மற்றும் பொசன் போயா  காலங்களில் நடத்தப்படும் விநோத பேய் வீடு கண்காட்சியை தடை செய்வது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, நவகமுவ பிரதேசத்தில் உள்ள பேய் வீடொன்றுக்கு தனது காதலனுடன் சென்றிருந்தபோது அவர்களுக்கிடையில் ​​அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ​​21 வயதுடைய தனது மனைவியை கணவர் தாக்க முற்பட்ட நிலையில், மோதலில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் இவர்களை சரீரப் பிணையில் விடுவிக்க கடுவெல நீதிவான் நேற்று (24) உத்தரவிட்டார்.

நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட ஒரு குழுவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளன.

குறித்த திருமணமான தம்பதியினர் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சட்டரீதியாக பிரிந்திருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...