பின்லாந்தின் வந்தா நகரில்

ஹிருனி என்ற இலங்கைப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

 
இந்தப் பெண் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகவும் யூரியூபராகவும் இருந்ததாக  வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த  புதன்கிழமை இரவு வந்தாவில் உள்ள திக்குரிலாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்துக்குள் ஒருவர் மற்றொரு நபரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக இரவு 8.00 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
 
தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதலுதவி அளித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
உயிரிழந்தவரின் சடலத்தை மீட்ட பொலிஸார், சந்தேக நபரை குடியிருப்பில் வைத்மே கைது செய்துள்ளனர்.
 
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர் மற்றும் சந்தேக நபர் மற்றும் அவர்களது உறவினரின் அடையாளங்களை பொலிஸார் வெளியிடவில்லை, ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று கூறினார்.
 
விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் இந்த சம்பவம் குறித்த விவரங்களை பொலிஸார் தெரிவிக்கவில்லை.
 
இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி