வெசாக் மற்றும் பொசன் போயா 

காலங்களில் கோரமான பேய் வீடுகளை காட்சிப்படுத்துவதை தடை செய்வது குறித்து புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, அடுத்த வருடம் முதல், விநோதமான பேய் வீடுகளை காட்சிப்படுத்துவதை தடை செய்வதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது என துறைசார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

இவ்வருடம் வெசாக் மற்றும் பொசன் தினங்களில்  நடத்தப்பட்ட பேய் வீடுகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அண்மையில், அஸ்கிரிய விஹாரையின் புத்தளத்துக்குப் பொறுப்பான பிரதம சங்கநாயக்க மிகெட்டுவத்த சுமித்த தேரர், பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம்  இவ்வாறான கண்காட்சிகளை தடை செய்யுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைக் கருத்திற் கொண்டு அடுத்த வருடம் முதல் வெசாக் மற்றும் பொசன் போயா  காலங்களில் நடத்தப்படும் விநோத பேய் வீடு கண்காட்சியை தடை செய்வது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, நவகமுவ பிரதேசத்தில் உள்ள பேய் வீடொன்றுக்கு தனது காதலனுடன் சென்றிருந்தபோது அவர்களுக்கிடையில் ​​அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ​​21 வயதுடைய தனது மனைவியை கணவர் தாக்க முற்பட்ட நிலையில், மோதலில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் இவர்களை சரீரப் பிணையில் விடுவிக்க கடுவெல நீதிவான் நேற்று (24) உத்தரவிட்டார்.

நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட ஒரு குழுவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளன.

குறித்த திருமணமான தம்பதியினர் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சட்டரீதியாக பிரிந்திருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி