ஹோட்டல் உரிமையாளரையும்

அதன் பணியாளர்கள் ஐவரையும் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி  உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்த  மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி சாமர தென்னகோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவை  நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

சந்தேகத்துக்கிமிடமின்றி பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன எனத் தீர்மானித்த நீதிபதி, தண்டனை, நஷ்டஈடு ஆகியவற்றுடன்  பிரதிவாதிகளுக்கு தலா ரூ.10,000/- அபராதம் விதித்தார்.
 
திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி  தற்போது கொஸ்கொட பொலிஸ் நிலையப பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரபாத் தேசபந்து திஸ்ஸமஹாராம பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி தற்போது உப பொலிஸ் பரிசோதகராக  வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒருவர் மற்றும் திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய நிலையில்  தற்போது பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சார்ஜன்ட் ஒருவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
 
2003 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரையும் நான்கு ஊழியர்களையும் கடத்திச் சென்று தடுத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியிருந்தார்.
 
விசாரணையின்போது, ​​திஸ்ஸமஹாராமவில் உள்ள 'திஸ்ஸ வில்லேஜ்' என்ற ஹோட்டலின் உரிமையாளர் உதய சாந்த திஸாநாயக்க, அப்போது அங்கு வேலை செய்த பல்கலைக்கழக மாணவியாக இருந்த சமந்தா, அஜந்தா, ருவன் மற்றும் சுஜீவ திஸாநாயக்க ஆகியோரை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
 
திஸ்ஸ வில்லேஜ் என்ற ஹோட்டல் தொடர்பாக ஹோட்டலின் உரிமையாளருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஹோட்டலின் உரிமையாளரையும் ஊழியர்களையும் கடத்திச் சென்று தடுத்து வைத்து கொடுமைப்படுத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 
 
இந்நிலையில், து தொடர்பாக, மனுதாரர் ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை எதிர்மனுதாரர்களான பொலிஸார் மீறியதையடுத்து, அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்தனர். 
 
இந்த நிலையில்,19 வருடங்களாக நடைபெற்ற நீண்ட விசாரணையில் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதிவாதிகள் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகள் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி