கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் மறுத்தது மற்றும் வெறுக்கத்தக்க பேச்சைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்ளவும், கொரோன தொற்றினால் இறக்கும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மதிக்கவும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இந்த கடிதம் ஏப்ரல் 8 ம் திகதி  அனுப்பப்பட்டுல்லதாக  "கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது.

சடலங்களை அடக்கம் செய்வது குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகள் குறித்து வழிகாட்டுதல்களுக்கு இணங்க நடக்குமாறும் இலங்கையில் சுகாதார அமைச்சகம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை திருத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

மோதலுக்கான காரணங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் சமூகம் உட்பட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வைத் தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சிறுபான்மையினரான முஸ்லிம்களை அடக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை சுகாதார அமைச்சு விளக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளது.

காரணங்கள் குறித்த விளக்கத்தை ஐ.நா. 48 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ள அதே வேளை, அடுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையில் இது சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது, ​​ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உரிமைகளை மீறும் வகையில் செயல்படுவது பொருத்தமானதல்ல என்றும், சடலங்களை அடக்கம் செய்வதைத் தடுக்கும் உத்தரவுகளை ஒருதலைப்பட்சமாக எடுக்கக்கூடாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடக்கம் செய்யும் உரிமைகளை மதித்தல் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சை நிறுத்துங்கள் என ஐ.நா. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

UN Part 1

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி