ஹங்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில்

16 வயது மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவியின் காதலன் உட்பட 8 இளைஞர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (24) ஹோமாகம பதில் நீதிவான்  பத்மசிறி ஜயவர்தன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
பாலியல் வன்புணர்வு, வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருந்தமை, கடத்தல் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக ஹங்வெல்ல பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி