தனது கணவருடன் உறவு கொண்ட பெண்ணிடம் ஐம்பது

இலட்சம் ரூபா கப்பம் கோரி, குறித்த உடலுறவுக் காட்சிகளின் காணொளிகளை இணையத்தில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்தக் குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் பன்னிப்பிட்டிய தெபானம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இருவரும் பல தடவைகள் உடலுறவு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாலியல் செயல்களை பொலிஸ் கான்ஸ்டபிள் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கணவரின் கைத்தொலைபேசியில் காணப்பட்ட வீடியோக்களை தனது கணவருடன் உடலுறவு கொண்ட பெண்ணிடம் காட்டி, இவற்றை இணையத்தில் வெளியிடாதிருக்க ஐம்பது லட்சம் ரூபா கப்பம் தருமாறு மிரட்டியுள்ளார்.

இது தொடர்பில், குறித்த பெண் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்துக்குச் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அந்த பணியகத்தின் அதிகாரிகள், தலைமை பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேணுகா விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதனையடுத்து ஓய்வு பெற்ற பெண் கான்ஸ்டபிள் மற்றும் அவரது கணவர் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி