கசிப்பு தயாரிப்பு தொடர்பில் பொலிஸாருக்கு

தகவல் வழங்கியமைக்காக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவரின் சடலத்தை மித்தெனிய பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கொட்டபொல, கொடகதுருவெல, தலாவ, காரியமடித்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஹெட்டிகே கீர்த்திரத்ன (44) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கசிப்புக் கடத்தல்காரரைக் கைது செய்துள்ளனர்

கொலை செய்யப்பட்டவர் மே 31ஆம் திகதி மாலை சூரியவெவ பகுதிக்கு செல்வதற்காக பஸ் வரும்வரை தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீதியில் நின்றுள்ளார். இதன் பின்னர் அவரது மனைவி அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அவர் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் அவர் சில நாட்கள் சென்றும் வீடு திரும்பாத நிலையில் அவரது மனைவி பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.



இதேவேளை, கொலை செய்யப்பட்ட தந்தையின் சகோதரரும் அவரது நண்பரும் தேங்காய் பறிப்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றுள்ளனர்.



இவர்கள் அங்கு சென்றபோது ஓரிடத்தில் காணப்பட்ட குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அந்த இடத்தை சோதனையிட்டபோது கொலை செய்யப்பட்வரின் சேர்டின் துண்டுகள் இருந்ததை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதனையடுத்து வலஸ்முல்ல நீதிவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரை வரவழைத்த மித்தெனிய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் துணியில் சுற்றி, இரண்டடி குழி தேண்டப்பட்டு அதில்போட்டு மண்ணால் மூடப்படிருந்தது.


இறந்தவர் மனைவி மற்றும் குழந்தைகளால் சடலம் அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி