மௌபிம ஜனதா கட்சியின் உயர்பீட

உறுப்பினராகவும் யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளராகவும் அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இதற்கான நியமனத்தை வழங்கினார்.
 
மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, இலங்கையை முற்போக்கான நாடாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அருண் சித்தார்த் சிறந்த சேவையை ஆற்றுவார் என தெரிவித்தார்.
 
குறிப்பாக அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற விடயத்தில் உரத்த குரல் எழுப்புவார் என தான் நம்புவதாகவும் திலித் ஜயவீர தெரிவித்தார்.
 
இதேவேளை, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அருண் சித்தார்த், கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிப்பதாகக்  கூறினார்.
 
நான் எப்போதும் செய்து வந்த தேசியவாதம் மற்றும் சித்தாந்தங்கள் ஊடாக ஓர் இலங்கையனாக, இந்த நாட்டுக்கு நான் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன் எனபதனைக் காட்டுகின்றன.
 
நான் தமிழனாக இருக்கலாம், இன்னொருவர் முஸ்லிமாக இருக்கலாம் அல்லது சிங்களவராக இருக்கலாம். இது எனது நாடு. இந்த நாடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி