யாழ்ப்பாணத்தில் முதியவர்கள் மற்றும் பிரபல

வர்த்தகர்கள் திடீரென காணாமல் போதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைமுகமான கரங்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதியவர்கள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் திடீரென காணாமல் போதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைமுகமான கரங்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

கடந்த ஜூன் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இரண்டு வர்த்தகர்கள் உட்பட மூவரின் தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்தார். 

இது தொடர்பி்ல் யாழ் மாவட்ட  தமிழ் அரசு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம், புங்குடுதீவு, மடத்துவெளியைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான வைத்தியலிங்கம் கனகலிங்கம், தனது வர்த்தகத்துக்காக இலங்கை அரசாங்கத்தால் தேசிய விருது பெற்றவர், 

அவருக்கு வயது 82. இவர் கடந்த மே மாதம் 12, 2024 ஆம் திகதி மடத்துவெளியில் வைத்து திடீரென காணாமல் போனார். மற்றவர்களின் உதவியின்றி நடக்கவோ அல்லது வாகனத்தில் ஏறவோ முடியாத நபர் காணாமல் போகிறார். " 

ஆறு மாதங்களுக்கு முன்னர் இதே பிரதேசத்தில் காணாமல்போன பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9 பிரிவில் வசிக்கும் யோகம்மா சோபிநாதன் ஆறு மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவர் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை." 

ஏழு வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை   பல்வேறு வழிகளில் தேடியும் அவரது தலைவிதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

 2017 ஜூலை 21 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல வர்த்தகரான 63 வயதுடைய வேலுப்பிள்ள நடராசா என்பவர்  மாதாந்த மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது காணாமல் போனார். ஏழாண்டுகள் கடந்தும் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த மூவரும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வைத்தே காணாமல் போயுள்ளனர். இவர்கள் தவிர மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லை. 

யாழ்ப்பாணம் தொடர்ந்து கடத்தல்கள், கைதுகள் அல்லது வாள்வெட்டுகளின் பூமியாக மாறியுள்ளது. இதன் பின்னணியில் இராணுவத்தின் மறைமுகமான கைகள் உள்ளன என்றே கூறமுடியும்.  பொலிஸாரின் ஆதரவும் இதற்கு  உள்ளது. இந்த விஷயங்களைக் கட்டுப்படுத்த அவர்கள் தயாராக இல்லை என்பதே இதன் பொருள் என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி