தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்கப்பட்ட பென்ஸ் கார் மற்றும் இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வழங்கப்பட்ட இரண்டு அதிநவீன சொகுசு உத்தியோகபூர்வ வாகனங்கள் சுகாதார அமைச்சர் பதவியை இழந்ததன் பின்னர் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சிவிலியன் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


2022 மே மாதம் முதல் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது அமைச்சர் மற்றும் ஊழியர்களுக்கு அமைச்சினால் வழங்கப்பட்ட பல வாகனங்கள் கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பெற்றுக் கொள்ளப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .

அவற்றை மீள ஒப்படைக்குமாறு சுகாதார அமைச்சு தொடர்ந்து கோரிக்கை விடுத்ததை அடுத்து, அமைச்சருக்கு உத்தியோகபூர்வ வாகனங்களாக வழங்கப்பட்ட பென்ஸ் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த போதிலும், இரண்டு சொகுசு கார்களும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி