பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையாளருக்கு அரசாங்கம் கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுக்கு சார்பான சமூக ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

"தேர்தல் ஆணையாளர் ஒரு தொற்றுநோயியல் நிபுணரோ அல்லது சட்ட நிபுணரோ அல்ல - அவர் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது" என்று இலக்கிய எழுத்தாளர் குணதாச அமரசேகரவை மேற்கோள் காட்டி லங்கா லீட் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

திவியின-இ செய்தித்தாளுக்கு தேர்தல் ஆணையாளர் அளித்த அறிக்கைக்கு பதிலளித்த லங்கா லீட், தேர்தல் திகதியை தன்னால் தீர்மானிக்க முடியாது என்று குணதாச அமரசேகர கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் ஒரு தொற்றுநோயியல் நிபுணரோ சட்ட நிபுணரோ அல்ல, அவர் தனது சட்டபூர்வமான கடமையை நிறைவேற்ற தனிப்பட்ட விடயங்களை  கருத்தில்  எடுத்து செயல்பட முடியாது என்று அமரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

அதை சமாளிக்க அதிகாரிகளுக்கு வலிமை இருக்க வேண்டும். என்னதான் இருந்தாலும், அவர் சட்டத்திற்கு வெளியே வேலை செய்ய முடியாது. சட்டத்தின் படி, அவர் தேர்தலுக்கு பொருத்தமான திகதியை அறிவிக்கக வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொற்றுநோய் பற்றி அவருக்கு மேலதிக தகவல் தேவையாயின் “அதற்காக அவர் தொற்றுநோய் குறித்த அதிகாரப்பூர்வ அதிகாரத்துடன் அட்டர்னி ஜெனரல் மற்றும் சுகாதார இயக்குனர் ஜெனரலை அணுக வேண்டும் என்றும் ஒரு நாடு ஒரு தொற்றுநோயுடன் முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி