இந்தியப் பெருங்கடலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால்

மீட்கப்பட்டு ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டவர்களில்  இலங்கையைச் சேர்ந்தவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம்   கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பிரித்தானியாவிலுள்ள அகதிகளை ருவாண்டாவுக்கு  அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளுக்கு இடையே  முரண்பாடான கருத்துக்கள் நிலவியபோதும் குடியேறியவர்களின் சிறிய குழு ஏற்கனவே ஒரு வருடத்துக்கும் மேலாக ருவண்டாவில் வசித்து வருகிறது.

அதன்படி, பிபிசி  நிறுவனம் அவர்களில்  நால்வரைச் சந்திக்க கிழக்கு-மத்திய ஆப்பிரிக்காவுக்குச் சென்றது.

அங்குள்ள தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்,   தங்களைத்  தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள் என  அங்கு சென்ற பிபிஸி  குழுவினர் அறிந்து கொண்டனர்.

1
மேலும் அவர்களின் சிக்கலான மருத்துவத் தேவைகள்  (சில சமயங்களில் கடந்தகால பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதையின் விளைவு) பூர்த்தி செய்யப்படுவதில்லை என்று பிபிஸி குழு கூறுகிறது. 

அவர்கள் ஒவ்வொருவரும் உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்காக வாரத்துக்கு  சுமார் $50 (£39) பெறுகிறார்கள்  ஆனால்  பிரித்தானியா மற்றும் ருவாண்டா அரசாங்கங்களால் இணக்கம்  கண்டவாறான   விதிமுறைகளின் கீழ் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

குறித்த நால்வரும்  ருவாண்டா வீதிகளில்  துன்புறுத்தல் மற்றும் தேவையற்ற பாலியல் சம்பவங்களை   எதிர்கொண்டதாக தெரிவித்தனர். 

2

இதன் காரணாக தாங்கள்  தங்குமிடத்தில் சுயமாகவே சிறை வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும்  வெளியே வர பயப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். 

இங்கிலாந்து நிரந்தரமாக வாழ ஒரு இடம் கிடைக்கும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர்  "ருவாண்டா ஒரு திறந்தவெளி சிறை முகாம்" என்று  பிபிஸியினரிடம்  தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி