இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த
அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார்.இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார்.
இஸ்ரேலிய போர்கால அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் என்பவரே பதவி விலகியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் காஸா பகுதிக்கான தெளிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைக்காததால் ஏற்பட்ட நெருக்கடி நிலையிலேயே அவர் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
டெல் அவிவ் நகரில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஆழ்ந்த வருத்தத்தின் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்.