வெளிநாட்டில் பணிபுரியும் தனது தாயாரை தொடர்பு

கொள்வதற்காக கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யச் சென்ற 13 வயது சிறுமியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

தொலைபேசி அட்டைகள் மற்றும் விவசாய பொருட்களை விற்பனை செய்யும் இடத்தின் உரிமையாளரான 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி 8 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார்.   

சிறுமி குறித்த கடைக்குச் சென்றிருந்தபோது, கடையின் முன் மற்றும் பின் கதவுகளை மூடிவிட்டு, உரம் சேமித்து வைத்திருந்த அறைக்குள் சிறுமியை அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.மிஹிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் சந்திரசிறியின் பணிப்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகள் குழு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....