மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு

காரணமாக  டெங்கு பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவ்வாறான  இடங்களை அவதானித்து அழிப்பதற்கு ட்ரோன்கள் மூலம் நுளம்பு மருந்து தெளிக்கப்படும் என கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பி.கே. புத்திக மகேஷ் தெரிவித்தார்..

மேல்மாகாண டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவின் ஆலோசனையின் பேரில்  விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரியின் 5 பிரிவுகளும்  கம்பஹா மாவட்டத்தில் 6  பிரிவுகளும்  களுத்துறை மாவட்டத்தில் 8 பிரிவுகளும் வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர்  தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி