நாலரை வயது சிறுவனைத்
தாக்கிய சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் மற்றும் இரண்டு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை பதவிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான சிறுவனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.