சட்டவிரோதமான முறையில்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 7,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து கொழும்பு மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
 
குறித்த சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 500,000 ரூபா என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
இது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி